‘சந்திராயன் -3’ வெற்றிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் பாராட்டு!

Date:

தெற்காசிய நாடான இந்தியாவால் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் “விக்ரம்“ திட்டம் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இதனை இலங்கை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட  உரையொன்றை  முன்வைத்தார்

இந்தியாவால் அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் “விக்ரம்“ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்கு இந்த விண்கலம் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இது இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான விண்கலமாகும். அத்துடன், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தியுள்ள முதல் நாடாகவும் இந்தியா பதிவாகியுள்ளது.

தெற்காசிய நாடாகவுள்ள இந்தியா, இத்தகையதொரு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமைக்காக வாழ்த்துவதுடன், இதனை வரவேற்கிறோம். இந்திய அரசாங்கத்துக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை சார்பில் எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவால் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் ‘விக்ரம் ‘ லேண்டர் மற்றும் ‘பிரக்யான்’ ரோவர் ஆகியவை நேற்று நிலைநிறுத்தப்பட்டதுடன், அவை தற்போது நிலவில் நடைபயணம் செய்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...