சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Date:

ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 5,6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கட்டாயம் பாராளுமன்ற அமர்வில் சமூகமளிக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வர வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வட்ஸ் அப் மற்றும் தொலைபேசிகளுக்கு தகவலை அனுப்பி நிலைமையை விளக்கியுள்ளது.

மேலும் வெளிநாடு அல்லது கொழும்புக்கு வெளியில் செல்வதை இந்த திகதிகளில் தவிர்க்குமாறும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...