சுவீடனில் வன்முறை: 50 பேர் படுகாயம்!

Date:

எத்தியோப்பியாவின் கட்டுப்பாட்டில் இருந்து எரித்திரியா கடந்த 1991 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

தற்போது எரித்திரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பிய நாடான சுவீடனில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆப்பிரிக்க கலாசாரத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கலாசார விழா கொண்டாடுகின்றனர்.

இந்நிகழ்வு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இடம்பெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட வன்முறையில் பொலிஸார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த கலவரத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...