தாய்லாந்தில் கார் மீது மோதிய ரயில்: 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Date:

தாய்லாந்தில் கார் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் சஷொன்சொ மாகாணம் மியோங் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அதிகாலை குறித்த கார் ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது வேகமாக வந்த சரக்கு ரயில், கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...