பாராளுமன்றத்தில் பெண் பராமரிப்பு பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!

Date:

பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பராமரிப்புத் துறையில் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தமக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி, குறித்த பெண்களிடம் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை என்று கடிதங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் மேற்பார்வையில் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினால் விசாரணை நடத்தப்படும் என ரோகினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக் குழு 7ஆம் திகதி முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...