பாவனைக்கு தகுதியற்ற செமன் மீன் எச்சரிக்கை!

Date:

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள மனித பாவனைக்கு தகுதியற்ற ஒரு வகை செமன் மீன் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தேசிய நுகர்வோர் சங்கம் நடத்திய கூட்டமொன்றின் போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மனித பாவனைக்கு தகுதியற்ற இவ்வகை செமன் மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் நிதி முகாமையாளர் வசந்தகுமார ஹரிஷ்சந்திர தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் மீன் மனித பாவனைக்கு தகுதியற்றது என தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி இந்த வகை செமன் வேறு லேபிள்களில் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

“சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகை செமன் மீன்களை தனியாகவும், டின்களை தனியாகவும் புதைக்க தம்புள்ளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை வேறு லேபிளில் எப்படி சந்தைக்கு வந்தது என தெரியவில்லை.இறக்குமதி செய்யப்பட்ட சீன செமன் 28.03.2021ஆம் திகதி அன்று உற்பத்தி செய்யப்பட்டது. காலாவதி திகதி 28.03.2024 என பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் அதன் லேபிளும் மாற்றப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...