பெண்ணின் மூளைக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட புழு: மருத்துவ உலகில் இதுவே முதல்முறை!

Date:

வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற ஒரு பெண்ணின் மூளையிலிருந்து உயிருடன் புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் 64 வயதுடைய பெண்மணி ஒருவர், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூளைக்குள் உயிருடன் ஒட்டுண்ணி புழு இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவ உலகில் இதுபோன்ற ஒரு பிரச்சினை இதற்கு முன் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குறித்த பெண்ணுக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்த போதும் என்ன பிரச்சினை என மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து தலைப்பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது, மூளைக்குள் 8 செ.மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு ஒட்டுண்ணி புழு இருந்தது கண்டறியபட்டுள்ளது.

பெண்ணின் மூளையில் இருந்தது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தை சேர்ந்த லார்வா புழுவாகும்.

மருத்துவ வரலாற்றிலேயே இது ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு பற்றிய தகவல் Emerging Infectious Diseases என்ற இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற ஒட்டுண்ணிகள் carpet pythons (மலைப்பாம்புகள்) இரைப்பையில் தான் காணப்படும். இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், மலைப்பாம்பின் கழிவு மூலமாக இந்த ஒட்டுண்ணி புல்வெளியில் வந்து இருக்கலாம். இதன் பின்னர் ஒட்டுண்ணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலுக்குள் வாய் வழியாகவோ, அல்லது எதோ ஒரு வகையிலோ சென்று இருக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...