மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் இல்லை!

Date:

மஞ்சள் காய்ச்சல் மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகியவற்றுக்கான தடுப்பூசிகள் நாட்டில் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் தொழில் நிமித்தம் செல்வோருக்கு மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட விநியோகஸ்தரால் சரியான முறையில் தடுப்பூசிகளை வழங்கப்படாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து அந்த தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. அதற்கிணங்க, குறித்த விநியோகஸ்தரிடமிருந்து விரைவில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு பயணிப்போருக்கு மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தடுப்பூசிகளும் தற்போது நாட்டிலுள்ள மருந்தகங்களில் இல்லை. குறித்த மருந்து தொகை, முற்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவை எதிர்வரும் வாரங்களுக்குள் நாட்டிற்கு கிடைக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...