மணிப்பூர் பதற்றம் முடிவதற்குள் கலவர பூமியான ஹரியானா: மசூதிக்கு தீ வைப்பு; 19 வயது இமாம் கொடூர கொலை!

Date:

ஹரியானா மாநிலத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மதக்கலவரம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், பள்ளிவாசலை எரித்து இமாமை 80 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக கொலை செய்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள நுஹ் என்ற பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் ஊர்வலம் சென்றனர்.

அப்போது ஏற்பட்ட மத வன்முறையில், வாகனங்கள், கடைகள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன. சாலையோரம் இருந்த கடைகளும் அடித்து தகர்க்கப்பட்டன.

இதில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.  80 பேர் காயமடைந்துள்ளனர்.  இதனை தொடர்ந்து குருகிராம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள்.

சமூக வலைதளங்களின் மூலமாக வெறுப்பு கருத்துக்கள் பகிரப்படுவதை தவிர்க்க இணையதளம் முடக்கப்பட்டு உள்ளது.

நுஹ் பகுதிக்குள் வெளிநபர்கள் நுழையாத வகையில் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போது புதிதாக வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிர்ச்சிகரமாக ஒரு தகவலை வெளியிட்டது ஹரியானா பொலிஸ்.

குருகிராம் பகுதியில் உள்ள ஜமா மசூதியை இரவு 80 பேர் கொண்ட கும்பல் தீ வைத்து எரித்து, பள்ளிவாசல் இமாமை கொடூரமாக கொலை செய்து இருக்கிறது. மற்றொரு நபர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து துணை காவல் ஆணையர் நிதிஷ் அகர்வால் தெரிவிக்கையில், “செக்டார் 57 இல் உள்ள அஞ்சுமான் ஜமா மசூதி செவ்வாய்கிழமை அதிகாலை தீ வைக்கப்பட்டது.

இதேவேளை ‘சிலரை அடையாளம் கண்டுள்ளோம். உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இமாமும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக ஹரியானா பொலிஸ் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நூஹ் மாவட்டத்தில் மத வன்முறை ஏற்பட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், சோஹ்னா, குருகிராம், ஃபரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்களிலும் வன்முறை பரவியது.

இதையடுத்து அங்கு பல சாலை மறியல் சம்பவங்கள் நடந்தன. சிலர் வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். கடைகள், வாகனங்கள் அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

 

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...