மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த மாணவி: நீதிமன்றத்தின் உத்தரவு

Date:

மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கெக்கிராவ நீதவான் பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், மாணவி தொடர்பில் சட்ட வைத்திய நிபுணரின் பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளித்த 14 வயது மாணவி தொடர்பில் கெக்கிராவை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

குறித்த மாணவி கல்வி கற்கும் பாடசாலைக்கு முன்பதாக போக்குவரத்து கடமையில் ஈடுக்கப்பட்டிருந்த பொலிஸார் மாணவி மது அருந்திவிட்டு பாடசாலைக்கு சமூகமளிப்பதை கண்டறிந்துள்ளனர்.

பொலிஸாரின் தற்போதைய விசாரணையில் மாணவியின் தாயின் இரண்டாவது கணவரின் தந்தையே இவ்வாறு மது அருந்துவதற்கு பழக்கப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

Popular

More like this
Related

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...