இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட உலகின் மிகப்பெரிய கேபிபரா எலிகள்! விரைவில் மக்கள் பார்வைக்கு

Date:

ஸ்லோவாக்கியா நாட்டிலிருந்து இலங்கைக்கு உலகின் மிகப்பெரிய எலி இனங்களில் ஒன்றான இரண்டு ஜோடி கேபிபராக்கள் (Capybara)அண்மையில் கொண்டுவரப்பட்டது.

குறித்த எலிகள் தொடர்பில் தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் விலங்குகள் தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டும் என அவர் அறிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கொறித்து உண்ணும் உயிரினங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த விலங்குகள் மிகவும் நட்புடன் இருப்பதாகவும், விலங்கு பரிமாற்றத் திட்டத்தின்படி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு அவை கிடைக்கப்பெற்றன என குறிப்பிட்டார்.

தண்ணீருக்கு அருகில் வசிக்கும் இந்த கேபிபரா தனது சுவாசத்தை நீருக்கடியில் சுமார் ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கும் திறன் கொண்டது என்றும் பணிப்பாளர் நாயகம் கூறினார்.

கேபிபராஸ் தாவரவகைகளை விரும்பி உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவை குழுக்களாக வாழ விரும்புகின்றன. ஒரு மாத தனிமைப்படுத்தப்பட்ட காலம் தற்போது முடிவடைந்துள்ளது. ஆகவே, இன்னும் சில நாட்களில் அவை மக்கள் பார்வைக்காக காட்டப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...