லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரை நடைபெற்ற 20 போட்டிகளில் 6.7 மில்லியன் ரூபாய் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டதிற்காக சேகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த போட்டியில் 497 பவுண்டரிகள் , 185 சிக்ஸர்கள் மற்றும் 1802 ஓட்டமற்ற பந்துகளால் இந்த பணத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் தொகை முழுவதையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு வழங்கவுள்ளது.
போட்டியில் ஒவ்வொரு பவுண்டரிகளுக்கும் 4000 ரூபாயும் ஒவ்வொரு ஆறு மதிப்பெண்களுக்கும் 6000 ரூபாயும் மற்றும் ஒவ்வொரு நிலக்குனு பந்துக்கும் மற்றும் ஒவ்வொரு ஓட்டமற்ற பந்துகளுக்கும் 2000 ரூபாயும் நன்கொடையாக வழங்கப்படும்.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘இதயம் மற்றும் பராமரிப்பு வளாகம்’ கட்டுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இது அமைக்கப்பட்டவுடன் , பிறவி இதய நோய் (CHD) மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.
மேலும், LPL போட்டிகளில் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ நிதிக்கு இலங்கை கிரிக்கெட் சபை வழங்க உள்ளது.