வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் ‘எச்சரிக்கை’ நிலை வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளை பரிசோதிக்கவும், கடினமான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், எடை குறைந்த மற்றும் வெள்ளை அல்லது லேசான ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.