அல் குர்ஆன் மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு திணைக்கள வழிகாட்டலின் கீழ் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் அல் குர்ஆன் மத்ரஸாக்களுக்களின் கட்டமைப்பு மற்றும் பாடத்திட்டம் தொடர்பில் மீள் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை திணைக்களம் ஆரம்பித்து இறுதித் தருவாயில் உள்ள நிலையில் மிக விரைவில் அதனை நடைமுறைப்படுத்த திட்டடமிடப்பட்டுள்ளது.
ஆல் குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பொதுவான பாடத்திட்டம் அதற்கான வழிகாட்டல்கள் மற்றும் தேசிய ரீதில் நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் இது தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள் தங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
ஆகவே திணைக்களம் மேற்கொள்ள உள்ள அல் குர்ஆன் மத்ரஸா மீள் ஒழுங்கு படுத்தும் திட்டங்கள் மற்றும் அது தொடர்பான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதோடு குர்ஆன் மத்ரஸாக்கள் தொடர்பான பின்வரும் தகவல்களை தங்களது மாவட்டத்திற்கு பொறுப்பான எமது திணைக்களத்தின் கள உத்தியோகத்தர்கள் மூலம் அல்லது கள உத்தியோகத்தர்கள் இல்லாத போது நேரடியாக அனுப்பி வைக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
01 அல் குர்ஆன் மத்ரஸாவின் பெயர் மற்றும் முகவரி.
02 பதிவிலக்கம்.
03 நிர்வாக அமைப்பு 04 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விபரம்.
05 மாவட்டம்.
06தொலைபேசி இலக்கம்.
எம் எஸ். அலர் அஹ்மத் உதவிப் பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.