இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இவை தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய,வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் பிராந்தியங்களில் கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50- 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Popular

More like this
Related

நாளைய தினம் அரசாங்க அலுவலகங்களுக்கு விசேட விடுமுறை

நாட்டில் நிலவும் அவசர அனர்த்த நிலைமை காரணமாக, வழமையான அலுவலக நடவடிக்கைகளை...

முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் பீ.எம்.ஃபாருக் மறைவுக்கு தமிமுன் அன்சாரி அனுதாபம்!

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி...

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...