நாட்டில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்த போதிலும், உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கடந்த ஆறு மாதங்களில் தேசிய கால்நடை மேம்பாட்டு சபை பால் உற்பத்தியை 2,599,617 லீட்டராக அதிகரித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 30 வீத அதிகரிப்பு என பால் உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
தற்போது, இலங்கையின் பால் உற்பத்தி 35-40 சதவீதமாக உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்குத் தேவையான திரவப் பால் உற்பத்தியில் 50 வீதத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்காகும்.
இந்நிலையில்,நாட்டில் திரவ பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால்,பால் மா இறக்குமதியை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
நாட்டுக்குத் தேவையான பாலில் 60 வீதம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இருந்து பெறப்படுகிறது.