எந்த வரலாறும் இல்லாதவர்கள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர்: சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்

Date:

சரித்திரமே இல்லாத ஒரு கட்சி பாரதிய ஜனதா அதின் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சரித்திரத்தை பேச கூப்பிட்டால் அதற்கு அவர்கள் வர மாட்டார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘வரலாற்றை பாதுகாப்போம்’ விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பாலக்கரையில் மாவட்ட தலைவர் பஜூலூர்ரகுமான் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆளூர் ஷாநவாஸ் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றுகையில்,

எந்த வரலாறும் இல்லாதவர்கள் ஆர்.எஸ்.எஸ், அவர்களுக்கு சரித்திரம் இல்லை. நமது நாட்டை இந்தியா என்கிறோம் அவர்கள் பாரத் என கூறுகிறார்கள் இந்தியா என்பது வரலாறு அதை மாற்றி அமைக்க முடியாது என்றார்.

மேலும், பாசிச பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களை பட்டியலிட்டும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் வரலாற்றை திரித்து விஷயத்தை கக்கும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்தும், முஸ்லிம் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்,

இதேவேளை முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டு உயர்த்தி தரவேண்டும், சாதி கொடுமைகளை அரசு தடுக்க வேண்டும், பொதுசிவில் சட்டத்தை எதிர்த்தும், வடநாட்டில் நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க தவறிய பாஜக அரசு கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்க்கு ஜனநாயக போராளி  விருதும், வரலாற்று ஆய்வாளர் திவான் அவர்களுக்கு வரலாற்று ஆய்வு பணியை கௌரவிக்கும் விதமாக வரலாற்று பேராசான் எனும் விருதும் வழங்கப்பட்டது.

ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் மேலதிக உரையை காணொளி மூலம் பார்க்க:

Popular

More like this
Related

ஜனாதிபதி – IMF பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான...

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...