1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ம் திகதி தமீழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லீம்களை நினைவுகூறும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்படுகிறது.
பொதுச்சந்தை,வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணிக்கு நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் துஆ பிராத்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு அமைதிப் பேரணியும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் முடிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களிடம் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் மஹஜர் ஒன்றும் நகரசபை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,உலமாக்கள்,கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள்,மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
உமர் அறபாத்