சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
விபத்துகளை தடுப்பதற்கும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கோளோளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பரிசோதனை புத்தகமொன்று அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மையில் சம்பவித்த விபத்துகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை பிரிவு முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இதுவரை பதிவு செய்யப்பட விபத்துகளில் 218 விபத்துகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் இடம்பெற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.