சிறுவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஊக்குவிப்பதன் மூலம் தகாத செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்: இல்ஹாம் மரிக்கார்!

Date:

கொழும்பு விஸ்டம் முன்பள்ளி விளையாட்டுப் போட்டிகள் கடந்த (09.08.2023) அன்று விமர்சையாக நடைப்பெற்றது .

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அமேசான் கல்லூரியின் முகாமையாளரும் பேராதனை பல்கலைக்கழக உளவியல் துறை விரிவுரையாளருமான இல்ஹாம் மரிக்கார் கலந்து சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக குழந்தைகள் உரிமை மேம்பாட்டு அதிகாரி திருமதி. துஷாரா விக்கிரமசிங்க மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைகுழுவின் மதிப்பீட்டாளர் பிம்பா ஜீவரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை விளையாட்டுப் பயிற்சிகளில் ஊக்குவிப்பதன் மூலம் போதைப்பொருள் பாவனை மற்றும் தகாத செயல்பாடுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இல்ஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார.

மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற முன்பள்ளி சிறார்களுக்கான பரிசில்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...