கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் வெளிநாடு செல்ல அனுமதி!

Date:

சில கட்டுப்பாடுகளின் கீழ் வைத்தியர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, விடுமுறைக்கான காரணம், விடுமுறையில் செல்லும் காலப்பகுதி மற்றும் அவ்வாறு விடுமுறை பெற்ற வைத்தியருக்கான மாற்றீடு என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில துறைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வெளிநாடுகளுக்கு சென்ற வைத்தியர்கள் மீள நாடு திரும்பாமை உள்ளிட்ட காரணங்களினால் வைத்தியசாலைகள் சிலவற்றின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன.

இந்தநிலையில் சுகாதார அமைச்சு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதேநேரம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகிய தரப்பினருக்கு இடையே அடுத்த வாரம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...