சுகாதார அமைச்சரை பதவி விலகக் கோரி பொது மக்கள் கையொப்பம்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை தொகுதி அமைப்பாளர் அஜித்.பி பெரேராவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மக்கள் கையொப்ப சேகரிப்பு இன்று களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.

முறையான சுகாதார சேவையை ஏற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், சுகாதார சேவையிலிருந்தும் தற்போதைய சுகாதார அமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து பொருத்தமான ஒருவருக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்குமாறு வற்புறுத்தி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த பெருந்தொகையான நோயாளர்கள் மற்றும் பிரதான வீதியில் பயணிக்கும் மக்களும் இந்த கையெழுத்துப் பத்திரத்தில் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அண்மைய தினங்களாக சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பல நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு பதவி விலக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இவ்வாறான சுகாதார நெருக்கடிகள் காரணமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் இவ்வாறு பொதுமக்களிடையே கையொப்பம் பெற்று வருகின்றனர்.

இலங்கையின் சுகாதாரத்துறை கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்நிலையில் நாட்டின் பல பாகங்களிலும் உள்ள அரச வைத்தியசாலைகள் கோடிக்கணக்கில் மின்சார நிலுவை கட்டணங்களை செலுத்தாத நிலையில் உள்ளன.

இந்நிலையில் கொழும்பிலுள்ள பிரபலமான ஏழு அரச வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவைத் தொகை அதிகரித்து வருவதால் இலங்கை மின்சார சபையானது குறித்த வைத்தியசாலை நிர்வாகங்களுக்கும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் சிவப்பு எச்சரிக்கை கடிதங்களை அனுப்பி வருகின்றது.

சுகாதாரத் துறை மீது நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ள நம்பிக்கை குறைந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...