தங்கள் கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாக குவைத் நாட்டில் பார்பி படத்திற்குத் தடை!

Date:

ஓரினச் சேர்க்கை முறையை ஊக்குவிப்பதாக கூறி குவைத் மற்றும் லெபனானில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது பார்பி திரைப்படம்.

கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலாவ விடுவதில் சளைக்காதவர்கள் ஹாலிவுட்காரர்கள். அந்த வகையில், குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பார்பி பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து பார்பி படத்தை உலாவ விட்டார் பெண் இயக்குநர் கிரெட்டா கெர்விக்.

ஃபேண்டஸி, காமெடியுடன் பெண்ணியம் பேசும் இந்த திரைப்படம், குழந்தைகளை தவிர்த்து பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அந்நியப்பட்டு இருந்தது. அந்த குறையையும் தீர்த்துள்ளது AI தொழில்நுட்பம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோரை பார்பி பாய்களாக உருமாற்றி உள்ள இந்த பேன்மேட் போஸ்டர்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், பார்பி திரைப்படம் ஓரின சேர்க்கை முறை மற்றும் பாலின மாற்றங்களை ஊக்குவிப்பதாக கூறி குவைத்தில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சமூக நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் கூறி, மீண்டும் சென்சர் செய்ய உத்தரவிட்டுள்ளது லெபனான் அரசு.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...