தென் ஆப்பிரிக்காவில் 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 64 பேர் பலியான சோகம்!

Date:

தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 பேர் உயிரிழந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 64 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக கருகி உயிரிழந்துள்ளனர். 43 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் ஒரு காலத்தில் பரபரப்பாக செயல்பட்ட கட்டிடமாக இருந்து வந்துள்ளது.

தற்போது குற்றச்செயல் புரியும் நபர்களின் கூடாரமாக மாறியுள்ளது. சட்டப்படி மற்றும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இங்கு தங்கியுள்ளனர்.

இந்த நிலையில்தான் இந்த கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டு உயிர்ப்பலி நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

உறவினர்களை தேடிக்கொண்டிக்கும் நபர்களிடம், கட்டிடத்திற்குள் யாரும் உயிருடன் இருப்பதற்கு சாத்தியமில்லை என்ற அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாடியிலும் சிறுசிறு குடில் அமைத்து தங்கியியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் 15-க்கும் மேற்பட்ட குடில்களில் தங்கியிருக்கிலாம் எனக் கூறப்படுகிறது.

அல்பர்ட்ஸ் தெரு, டெல்வர்ஸ் கார்னரில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியின் ஏராளமான கட்டிடங்களில் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள், இன்னும் குடியுரிமை பெற முடியாத ஏராளமானோர் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...