தேசிய கீதத்தை திரிபுப்படுத்தி பாடிய குற்றச்சாட்டு தொடர்பில் பிரபல பாடகி ஒமாரியா சிங்கவன்சவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய ஒமாரியா சிங்கவன்சவிடம் இன்றைய தினம் (02) விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடரில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக அரச நிர்வாக மற்றும் சுதேச விவகார அமைச்சிக்கு ஒமாரியா இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் எல்.பி.எல் டீ20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வின் போது ஒமாரியா தேசிய கீதத்தை பாடியிருந்தார்.
வித்தியாசமான முறையில் தீரிபுபடுதிய வகையில் தேசிய கீதத்தை பாடியதாக ஒமாரியா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அரச நிர்வாக அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகமும் ஓமாரியாவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள உள்ளது.