பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

Date:

பொல்பிட்டியவில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையில் 220 கிலோவொட் மின்சாரத்தை கொண்டு செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பியினை இணைக்கும் இறுதிக்கட்டப் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அதனை அன்மித்தப்  பகுதிகளில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு மின்சார சபை கோரியுள்ளது.

பட்டங்களை பறக்கவிடுவதன் காரணமாக மின்சார விநியோகத்திற்கு இடையூறாக உள்ளதாக குறித்த திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் பொறியியலாளர் அனுருத்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2027 முதல் 2030ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேசிய மின்கட்டமைப்பிற்கு ஆயிரத்து 20 மெகாவொட் மின்சாரத்தை இணைக்கும் திறன் கொண்ட 7 புதிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வலுசக்தி அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த பணியை துரிதப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 92,254 ஆக...

ஊவா, மட்டு, அம்பாறையில் பிற்பகலில் மழைக்கு சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்...

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...