பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!

Date:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம்  ஓகஸ்ட் மாதத்தில் 4 வீதமாக குறைந்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, கடந்த ஜூலை மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 6.3% ஆக பதிவாகியிருந்தது.

இது 2.3 வீதம் குறைவடைந்து ஓகஸ்டில் 4 வீதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உணவுப் பணவீக்கம் ஜூலையில் -1.4 விகிதத்தாலும் ஓகஸ்டில் -4.8 விகிதத்தாலும் குறைந்துள்ளது. அதே சமயம் உணவு அல்லாத பணவீக்கம் ஜூலையில் 10.5% இலிருந்து ஓகஸ்டில் 8.7% ஆகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் இலங்கையின் பணவீக்கம் 76 சதவீதம்வரை உயர்ந்திருந்த நிலையில் அரசாங்கத்தின் சில இறுக்கமான கொள்கைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக பணவீக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்தது.

இந்நிலையில், தற்போது ஒட்டுமொத்த பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு குறைவடைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் ஓரளவு ஸ்திரத்தன்மை நிலவுமென பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...