பாணந்துறை கோட்ட மட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகள் மற்றும் பிலியந்தலை கோட்ட மட்ட பாடசாலையிலிருந்தும் 2021 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான 31 மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் விஷேட சின்னம் வழங்கும் வைபவம் நேற்று (27) பாணந்துறை Zerendib Grand வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பாணந்துறை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் ஆசிரியை திருமதி. ரஸானா ஹஜ்ஜுல் அக்பர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதுடன் அவர் ஒரு தாயாக, மனைவியாக மற்றும் செயற்பாட்டாளராக செய்த சமூக பங்களிப்புக்காக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, அல்பஹ்ரியா மத்திய கல்லூரி, அல் இல்மா முஸ்லிம் வித்தியாலய, ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்கேற்றதுடன் விஷேட உரைகளையும் நிகழ்த்தினார்கள்.


நிகழ்வில் பாணந்துறை பிரதேச தமிழ்மொழி மூல அரச பாடசாலைகளிலிருந்து 2021 GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழகம் தெரிவாகிய
ஜீலான் மத்திய கல்லூரி-16
தொட்டவத்தை அல்பஹ்ரியா மத்திய கல்லூரி-09
எலுவில அல்- அலவிய்யா முஸ்லிம் வித்தியாலயம்- 02
பிலியந்தலை கோட்ட மட்ட பாடசாலையான மொறட்டுவ- எகடஉயன அல்-அறபாத் முஸ்லிம் வித்தியாலயம்-04 மாணவர்கள் என மொத்தமாக 31 மாணவர்கள் அதிதிகளினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.