பஸ் ஜன்னலிலிருந்து தலையை வெளியில் வைத்து பயணித்த மாணவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு!

Date:

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல பகுதியில் பஸ்ஸில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்து சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள்தாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பௌத்த அறநெறி பாடசாலை கல்விப் பயணத்திற்காக நேற்று மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குறித்த மாணவர் பயணித்துள்ளார். இதன்போது, பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மாணவன், ஜன்னலிலிருந்து தலையை வெளியில் வைத்து சென்றுள்ளார். இதன்போது, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...