பாடசாலை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, பாடசாலை நேர அட்டவனையினை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிப்பதற்கான யோசனை கல்வி அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான யோசனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதனை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.