பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதில் புதிய மாற்றம்!

Date:

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 06 மாதங்களுக்குப் பிறகு, அந்த ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் செல்லாது என்று கூறுகின்றனர்.

வழங்கப்பட்ட எந்தவொரு சான்றிதழின் பிரதி இருந்தால், புதிய நகலைப் பெறத் தேவையில்லை என்று திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

எனினும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே புதிய நகலை சமர்ப்பிக்க வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில், பதிவாளர் நாயகம் திணைக்களம், கல்வி, வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு பதிவு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...