இஸ்லாமியர்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மக்காவை நேற்று காற்றுடன் கூடிய பலத்த மழை தாக்கியது.
புயலின் தீவிரத்தை காட்டும் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ஜித்தாவில் வடகிழக்கில் உள்ள அஸ்ஃபான் சாலையில் பெய்த மழை மற்றும் புயலுக்கு மத்தியில் மின்கம்பங்கள் சரிவதையும் மின்கம்பங்கள் ஆபத்தான முறையில் வீதிகளில் சாய்ந்திருப்பதையும் காட்டுகின்றது.