போர் வீரர்களின் நினைவுத்தூபி ஒன்று தீ வைத்து எரிப்பு: விசாரணைகள் தீவிரம்!

Date:

வாழைச்சேனை ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபிக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தத்தின் போது உயிரிழந்த 187 முஸ்லிம் பிரஜைகள்,  ஆயுதப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய நினைவத்தூபியே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

நினைவுத்தூபிக்கு அருகே சாக்கு மூட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

தீயை பார்த்த இரு வணிகர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

தீயினால் நினைவுத்தூபியின் கீழ்ப் பகுதியின் இரண்டு பக்கங்களும் கருகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமே குறிப்பிடத்தக்கது!

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...