இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பிணை வழங்கப்பட்டதுடன் இந்த குழு அரசு கட்டிடங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் நேற்று காலை பலர் நுழைய முற்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டையில் கடும் பதற்றமான சூழல் நிலவியது.
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் கூட்டு சங்கத்தின் உறுப்பினர்களாக தங்களை அடையாளப்படுத்திய குழு, தங்களின் குத்தகை வசதி பிரச்சினைகள் தொடர்பான சலுகைகளை கோரி வந்திருந்தனர்.