மீண்டும் அரகலய?: ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கை!

Date:

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றதைப் போன்று பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை ( 08) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில்  உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிலவும் வறட்சி, மின்சார நெருக்கடி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களை முன்னிறுத்தி அரகலய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள சிலர் எதிர்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் வீடுகளை சுற்றி வளைக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான தாக்குதல்களை தடுக்க விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

வறட்சியால் ஏற்பட்ட தண்ணீர் நெருக்கடி மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி வன்முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு சில ஊடக நிறுவனங்களும் பின்னணியில் இருப்பதாக குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...