மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாத்திரம் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், திட்டமிட்டபடி தடையின்றி மின் விநியோகத்தினை மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, இலங்கை மின்சாரசபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்துடன் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், தடையின்றி மின் விநியோகத்தை அமுல்படுத்துவது மற்றும் விவசாயத்திற்குத் தேவையான அதிகபட்ச நீரை உறுதி செய்வது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.