முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை!

Date:

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளது. குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கையில் உள்ள வைத்திய நிபுணர்கள் அதிகம் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள்.

இறுதியாக நடைபெற்ற கலந்துரையாடலில் இரண்டு வைத்தியசாலைகளுக்கும் இரண்டு வைத்தியர்களையாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சுகாதார அமைச்சரும் இருந்தார்.

அதனை நாங்கள் தற்போது தொடர்ந்து கேட்கின்றோம். எதிர்வரும் காலத்தில் நிரந்தர வைத்திய நிபுணர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

விஷேட ஆளணி எங்களுக்கு தேவையாக உள்ளது. நிதி அமைச்சு புதிய ஆளணியை நியமிக்காத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.

உள்ளக கட்டமைப்பிலும் விரைவான அபிவிருத்தி தேவையாகவுள்ளது. அதற்கு திட்டம் ஏதாவது இருந்தால் மேற்கொள்ள வேண்டும்.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் காணி பிரச்சினை தாமதமானதால் பாரிய கட்டிடங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

அதேபோல் மன்னாரிலும் சீரி ஸ்கான் வந்து திரும்பி போனதால் பிரச்சினை இருந்தது. அங்கும் நிரந்தர வைத்திய பணிப்பாளர் இல்லாமை ஒரு பிரச்சினையாக உள்ளது.

உள்ளக கட்டமைப்பை பேணும் இரண்டு வைத்தியசாலையிலும் குறைபாடாக இருக்கிறது. இது தொடர்பாக கூட்டத்தில் தீர்மானமாக எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர்களுடன் சந்திப்பொன்றினை மேற்கொண்டு இதனை நிவர்த்தி செய்வோம் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...