மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் காலமானார்!

Date:

மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (வயது 75) அவர்கள் லண்டனில்  விபத்தொன்றில் இன்று  அகால மரணமானார்!
இவர் இலங்கை வானொலி வர்த்தக சேவை நேயர்களின் ஏகோபித்த அபிமானத்தை வென்றெடுத்தவர்.

அதுமட்டுமல்லாமல்  லண்டனில் இருந்து முழங்கி வந்த BBC தமிழோசையில் செய்தி வாசிப்பில் தரணியெங்கும் புகழ் பெற்றார்.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து தனது புத்தகங்களின் வெளியீட்டு விழாக்களை வெற்றிகரமாக நடத்தியிருந்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் 14ம் திகதி சனிக்கிழமை கனடாவிலும் தனது நூல்கள் சிலவற்றை வெளியிடும் முயற்சியில் இறங்கி அதற்கான ஏற்பாடுகளை செய்வதில் கனடாவில் உள்ள பல நண்பர்கள் பலரோடு கலந்துரையாடல்களை நடத்தி வந்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...