சமையல் எரிவாயுவின் புதிய விலை தொடர்பான அறிவித்தல் நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலரால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.