லிந்துலையில் வேன் விபத்து: இருவர் படுகாயம்!

Date:

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேன் ஒன்று 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் வேனில் சென்ற மற்றுமொருவரும் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று (26) காலை 5 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. குறித்த வேன் டிக்கோயா பகுதியில் உள்ள வாகன திருத்த நிலையத்துக்கு சென்று லிந்துலை மட்டுகலை தோட்டத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சாரதி வாகனத்தை செலுத்தும் போது ஏதோ ஒரு விஷப்பூச்சி தன்னை தாக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக சாரதி பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்திலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த விபத்தில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம் முற்றாக சேதம் அடைந்துள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...