நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் பொதுமக்களை முடிந்தளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
மேலும், மதிய நேரத்தில் சூரிய ஒளி படுவதை முடிந்தவரை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வெளிப்புற வேலைத் தளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் நிழலான பகுதிகளில் வழக்கமான ஓய்வு எடுக்க பரிந்துரைக்கப்படுகின்றனர்.
பிற்பகலில் குழந்தைகள் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.