ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (19) யால தேசிய பூங்காவிற்கு விஜயம் செய்தார்.
யால தேசிய பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் விரைவாக பிரவேசிப்பதற்கான பயணச்சீட்டுகளை வீதியூடாக பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், நிலவும் வறண்ட காலநிலை காரணமாக பூங்காவில் உள்ள வறண்டு கிடக்கும் கிணறுகளுக்கு நீரை வெளியிடும் திட்டத்தில் பூங்கா நிர்வாக திணைக்களமும் இணைந்துள்ளது.
இந்த விஜயத்தில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங்கும் இணைந்துகொண்டார்.