2024 முதல் தண்ணீர் கட்டண பட்டியல் எஸ்.எம்,எஸ், மின்னஞ்சல் மூலம் வழங்க நடவடிக்கை!

Date:

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை  ஜனவரி 2024 முதல் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் மூலம் மாதாந்த நீர் கட்டண விபரங்களை நுகர்வோருக்கு வழங்கும் என வர்த்தக பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்தி மற்றும் இ-பில் சேவைகளுக்காக வாடிக்கையாளர்கள் தங்களை உடனடியாக பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் பொலன்னறுவை, திருகோணமலை, கொழும்பு தெற்கு மற்றும் கண்டி தெற்கு ஆகிய இடங்களில் மாதாந்த நீர் கட்டணங்களை வழங்குவதற்காக இ-பில் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

எந்த ஒரு நுகர்வோர் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றினால், அவர்கள் நீர் வழங்கல்   சபை உடன் அதன் ஹாட்லைன் 07 1939 9999 மூலம் SMS அனுப்புவதன் மூலம் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

தண்ணீர் பில் கணக்கு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மேலே உள்ள ஹொட் லைனுக்கு SMS மூலம் அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...