அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய தொழிலாக சுதேச மருத்துவத் துறையை மேம்படுத்த நடவடிக்கை!

Date:

சுதேச மருத்துவத் துறையை அந்நியச் செலாவணியை உருவாக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதியைக் கொண்ட ஒரு தொழிலாக மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு கூட்டுப் பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆரோக்கியமான சனத்தொகையைக் கட்டியெழுப்புவதற்காகவும், சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் சுதேச மருத்துவ முறையிலும் ஆயுர்வேத முறையிலும் பல புதிய போக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த காலகட்டத்தை சுதேச மருத்துவத்துறையில் புத்துயிர் பெற்ற சகாப்தமாக குறிப்பிடலாம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில், கடந்த காலங்களில் நாங்கள் விரிவான பணிகளைச் செய்துள்ளோம்.

நம் நாட்டில் சுதேச மருத்துவ சேவை என்பது தரமான மருத்துவ சேவையாக காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு அப்பால் சுதேச மருத்துவத்துறையை வர்த்தக பெறுமதியுடன் கூடிய அந்நிய செலாவணியை உருவாக்கக்கூடிய ஒரு தொழிலாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை சுதேச மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து தற்போது ஆரம்பித்துள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...