இறுதி வரை தனது நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்து இன்று மறைந்த பிரபல மார்க்க சொற்பொழிவாளர் நுஸ்ரான் பின்னூரி!

Date:

பஸ்யாலையை பிறப்பிடமாகவும் மல்வானை விதானகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு 7.30 மணிக்கு மள்வானை ரக்ஸபானை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மர்ஹூம் நுஸ்ரான் பின்னூரி அவர்கள் சமூக வலை தளங்களிலும் வேறு மட்டங்களிலும் விமர்சனங்ளை எதிர்கொண்டார்.

குறிப்பாக  சில வகை வைத்தியம் தொடர்பில் அவரிடம் காணப்பட்ட நிலைப்பாடுகள் காரணமாக சில மருத்துவர்களாலும் புத்திஜீவிகளாலும் விமர்சிக்கப்பட்டு வந்தார்.

தனது நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்த அஷ்ஷெய்க் நுஸ்ரான் துணிச்சலான போக்குடைய ஒரு மனிதர். அவர் அறியப்படக் காரணமாயிருந்த மருத்துவம் உள்ளிட்ட பல கோணங்களில் ஆளுமையும், அறிவும், துணிவும் மிக்க ஒருவராக அவர் திகழ்ந்தார் .

‘ஸஹாபாக்கள் யார்? வழிகேடு என்றால் என்ன? கிலாபத்துடைய வீழ்ச்சி, அதன் பாரதூரம் என்ற பல்வேறு தலைப்புக்களில் இவர் உரையாற்றியுள்ளார் .

பல உலமாக்கள் இவரின் மரணம் குறித்து தமது அனுதாபச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

வல்லவன் அல்லாஹ் அன்னாரை மன்னித்து பொருந்திக் கொள்வானாக,.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...