இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதிகளுக்கு இடையில் சந்திப்பு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு மேலதிகமாக, பாரிஸ் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் கரியமில வாயு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கை மற்றும் சிங்கப்பூர் அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ விஜயத்தில் பத்து பேர் கொண்ட குழுவொன்று இணைந்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...