உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் உயர்வு: விவசாய அமைச்சர்

Date:

நாட்டில் பால் கைத்தொழில் வீழ்ச்சியடைந்த போதிலும், உள்ளூர் பால் உற்பத்தி மீண்டும் அதிகரித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களில் தேசிய கால்நடை மேம்பாட்டு சபை பால் உற்பத்தியை 2,599,617 லீட்டராக அதிகரித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை 30 வீத அதிகரிப்பு என பால் உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தற்போது, ​​இலங்கையின் பால் உற்பத்தி 35-40 சதவீதமாக உள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்குத் தேவையான திரவப் பால் உற்பத்தியில் 50 வீதத்தை நாட்டிலேயே உற்பத்தி செய்வதே  அரசாங்கத்தின் நோக்காகும்.

இந்நிலையில்,நாட்டில் திரவ பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால்,பால் மா இறக்குமதியை நிறுத்துமாறு இந்த நிறுவனங்களின் அதிகாரிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நாட்டுக்குத் தேவையான பாலில் 60 வீதம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இருந்து பெறப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...