பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு இரண்டு பிரதி அமைப்பாளர்கள் பதவிகளை புதிதாக ஏற்படுத்தி அந்த பதவிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர், இந்த பதவிகள் இருக்கவில்லை என்பதுடன் புதிய பதவிகளுக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.
இந்த பிரதி அமைப்பாளர் பதவிகளை வகிக்கும் ஒருவருக்கு தலா 11 ஊழியர்கள் நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
அரச சேவையில் பணிப்புரியும் அதிகாரிகளை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று அந்த அனுமதியை மாற்றி ஊழியர்களாக வெளியாரை நியமிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பதவிகளை வகிப்பவர்களுக்கு இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஊழியர்களுக்காகவும் சில வாகனங்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை எனக்கூறி அண்மையில் பணத்தை பெற்று ஊழியர்களுக்கு செலுத்தியுள்ளனர்.
புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலைமையில், அரசாங்கத்தை விமர்சிக்காது அமைதியாக இருப்பது என சம்பந்தப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.