ஏ9 வீதியில் கோர விபத்து: மூவர் உயிரிழப்பு!

Date:

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்பகுதியில் வேன் மோதிய நிலையில் குறித்த லொறி முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வேனின் முன் இருக்கையில் பயணித்த நபர் ஒருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வேனில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா புதிய நகரம், வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...