தாருல் ஈமான் இலக்கிய வட்டம் மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்புப் பிராந்தியம் இணைந்து ஏற்பாடு செய்த “ஹிஜ்ரத் சிறப்புக் கவியரங்கம்” 15.08.2023 அன்று கொழும்பு மருதானை தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி Faris Saly அவர்கள் வரவேற்பு கவிதையுடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி Imthiyaz Rasheed M தலைமை வகித்து கவி பாட அவருடன் கவிஞர் Rauf Hazeer, கவிஞர் Gazzaly Ashshums, கவிஞர் Abdul Raheem Mohammdu Farveen மற்றும் கவிஞர் Marikkar Sacp ஆகியோரும் இணைந்து ஹிஜ்ரத் கவி பாடினர். அத்துடன் நளீர் நஸீர் நளீமியின் பாடலும் இடம்பெற்றது.
தாருல் ஈமான் இலக்கிய வட்டத்தின் தலைவர் தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் M.H.M. ஹஸன் அவர்கள் முடிவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வை அஷ்ஷெய்க் அஸ்ஹர் சாதித் நளீமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இஸ்லாமிய உலகின் முதல் கவிஞரான நபித் தோழர் “ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரழி)” அவர்களை நினைவுகூறும் வகையில் ஹஸ்ஸான் பின் ஸாபித் அரங்கம் என பெயர்சூட்டப்பட்ட அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் இலக்கியவாதிகள், கவிஞர்கள், மார்க்கத் தலைவர்கள், ஆர்வலர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.








